குளத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு

Kanimoli
3 years ago
குளத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு

கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் கந்தன் குளத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் ஒன்று இன்று (12) மீட்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மல்லாவி ஐயங்கன் குளத்தைச் சேர்ந்த பகிரதன் சுமன் என்ற 21 வயதுடைய இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவானின் அனுமதியுடன் சடலம் மீட்கப்பட்டு, உடல் கூறு பரிசோதனைகளின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை கிளிநொச்சி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4