சுற்றுலா விசாவில் இலங்கையர்களை மலேசியாவிற்கு அனுப்பும் மற்றுமொரு மோசடி

Prathees
2 years ago
சுற்றுலா விசாவில் இலங்கையர்களை மலேசியாவிற்கு அனுப்பும் மற்றுமொரு மோசடி

சுற்றுலா விசா மூலம் இலங்கையர்களை மலேசியாவிற்கு அனுப்பும் மற்றுமொரு மோசடி அம்பலமாகியுள்ளது.

மலேசியாவிற்கு விஜயம் செய்ய வந்த இலங்கையர்கள் 14 பேர் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே அது இடம்பெற்றுள்ளது.

இவர்களில் ஒன்பது பேர் சுற்றுலா விசா மூலம் மலேசியாவிற்கு வேலைக்குச் செல்ல முயற்சித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

நான்கு பெண்களும் ஐந்து ஆண்களும் இந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகள் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் சுற்றுலா வீசாவில் வெளிநாடுகளுக்குச் சென்றமை தொடர்பில் நீண்ட நேர விசாரணைகளின் பின்னர் இந்த மோசடி தொடர்பான உண்மைகள் வெளியாகியுள்ளன.

இந்த மோசடிக்கு தலைமை தாங்கியவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!