இலங்கை கிரிக்கட் வீரர்கள் அதிகாரிகள் குறித்து விசாரணை ஆரம்பம்!

Kanimoli
1 year ago
இலங்கை கிரிக்கட் வீரர்கள் அதிகாரிகள் குறித்து விசாரணை ஆரம்பம்!

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற 20க்கு 20  உலகக் கிண்ணப் போட்டியின் போது வீரர்களின் நடத்தையை மாத்திரமன்றி, அணி உறுப்பினர்கள் மீது அதிகாரிகள் உண்மையான அக்கறையை காட்டினார்களா என்பதை அறியவும் ஆறு பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க நியமித்துள்ளார்.
இந்தக் குழுவிற்கு மேல்நீதிமன்ற முன்னாள் நீதிபதி குசாலா சரோஜினி தலைமை தாங்குவார். முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவரும் இந்தக் குழுவில் உள்ளடங்குவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சு செயலாளர் கிங்ஸ்லி பெர்னாண்டோ, ஓய்வுபெற்ற குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுதத் நாகஹமுல்ல, ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ், முன்னாள் கிரிக்கெட் வீரர் நளின் டி அல்விஸ் மற்றும் சட்டத்தரணி ஷலனி ரோஷனா ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.
இந்தக்குழுவுக்கு காலக்கெடு எதுவும் வழங்கப்படவில்லை, ஆனால் செயல்முறையை விரைவுபடுத்துமாறு கோரப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை இலங்கையின் கிரிக்கட் வீரர் சாமிக்க கருணாரத்ன தொடர்பான பிரச்சினைகள் கையாளப்பட்ட விதம் குறித்தும் அமைச்சர் கவலை தெரிவித்தார். 26 வயதான அவருக்கு ஸ்ரீலங்கா கிரிக்கட்டால் ஒரு வருட இடைநிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது
மோசமான தகுதி, அல்லது மோசமான நடத்தைக்காக அவர் நீக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது.
எனினும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
அவர், மோசமான தகுதியுடன்; இருந்தால் அல்லது ஒழுக்காற்று நடவடிக்கையை எதிர்கொண்டால், அவரை சர்வதேச கிரிக்கட்டிலும் இடம்பெறச் செய்யக்கூடாது என்பதே தனது கருத்து என்று அமைச்சர் தெரிவித்தார்.
அவர் ஏற்கனவே எல்பிஎல் அணியிலும் இடம் பெற்றுள்ளார்.
இந்தநிலையில் அடுத்த ஆண்டு முதல் ஒழுக்கக் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் எந்த ஒரு ஆட்டக்காரரும் அல்லது வீரரும் லீக் கிரிக்கெட்டில் கூட தேர்ந்தெடுக்கப்படமாட்டார்கள் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கை கிரிக்கட்டில் எந்தவொரு இடைக்கால குழுவை நியமிக்கும் திட்டத்தையும் அமைச்சர் மறுத்துள்ளார், ஆனால் 2023 ஆம் ஆண்டில் பல மாற்றங்கள் இருக்கும் என்று சுட்டிக்காட்டினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!