போராட்டங்களை அடக்க, இலங்கையின் பாணியை பின்பற்றும் இங்கிலாந்து!

Kanimoli
1 year ago
போராட்டங்களை அடக்க, இலங்கையின் பாணியை பின்பற்றும் இங்கிலாந்து!

ஐக்கிய இராச்சியத்தில் இடம்பெறும் சட்டவிரோத போராட்டங்களை, இலங்கையின் பாணியில் தடுக்க இங்கிலாந்து தயாராகிறது.
சுயநல சிறுபான்மை குழுக்களால், மேற்கொள்ளப்படு;ம் போராட்டங்கள் காரணமாக பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை சீர்குலைவதை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கூறியதாக பிபிசி மேற்கோளிட்டுள்ளது.
ஜஸ்ட் ஸ்டொப் ஒயில் போன்ற சில சுற்றுச்சூழல் எதிர்ப்புக் குழுக்கள் பயன்படுத்தும் தந்திரோபாயங்களைப் பற்றி விவாதிக்க உள்துறைச் செயலர் சுயெல்லா பிரேவர்மேன் காவல்துறை தலைமைக் காவலர்களை சுனக் சந்தித்தார்.
இதனையடுத்து கருத்துரைத்த அவர், சட்டவிரோதப் போராட்டங்களைத் தடுக்க பொலிஸாருக்கு ஏற்கனவே புதிய அதிகாரங்கள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் சாதாரண குடும்பங்களுக்கு ஏற்படும் துன்பங்கள் மற்றும் இடையூறுகள் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்றும் கூறினார்.
கடந்த செப்டம்பரில், இலங்கையில் போராட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் இங்கிலாந்து வருத்தம் தெரிவித்திருந்த நிலையிலேயே அந்த நாட்டு பிரதமரின் தற்போதைய கருத்து வெளியாகியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!