பல புதிய விமானங்களை குத்தகைக்கு பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் முயற்சி

Kanimoli
1 year ago
 பல புதிய விமானங்களை குத்தகைக்கு பெற்றுக்கொள்ள  இலங்கை அரசாங்கம் முயற்சி

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், பயணிகள் சேவைக்காக  பல புதிய விமானங்களை குத்தகைக்கு பெற்றுக்கொள்ள  இலங்கை அரசாங்கம் முயற்சித்து வருகிறது.

தற்போதுள்ள சுமார் ஆறு அல்லது ஏழு விமானங்களுக்கான குத்தகை காலம் விரைவில் முடிவடையும் என நாட்டின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார், இத்தனையடுத்தே மேலும் பல புதிய விமானங்களை குத்தகைக்கு எடுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அடுத்த மூன்று மாதங்களுக்குள் பாரியளவிலான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என நாங்கள் நம்புவதால், தடையில்லா சேவையை உறுதிப்படுத்த விரும்புகிறோம். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அர்ப்பணிப்புள்ள சேவையாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமாக ஒரு விமானம் இல்லை எனவும், அந்த நிறுவனம் தற்போது 24 குத்தகை விமானங்களை பராமரித்து வருவதாகவும் அமைச்சர்  தெரிவித்துள்ளார்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!