மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் மின்சார உபகரணங்களை திருடிய இருவர் கைது
Prasu
2 years ago

மொரட்டுவை பல்கலைக்கழக வளாகத்தின் விசேட பாதுகாப்பு கமெராவை செயலிழக்கச் செய்து அமைப்பைப் புறக்கணித்து உள்ளே நுழைந்து அங்கிருந்த பெறுமதியான மின் சாதனங்கள் மற்றும் மின்விளக்குகளை திருடிய சந்தேக நபர்கள் இருவரை கைது செய்துள்ளதாக மொரட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, சந்தேக நபர்கள் பாதுகாப்பு கமெராக்களை செயலிழக்கச் செய்து அங்குள்ள அறை ஒன்றுக்குள் பிரவேசித்துள்ளமை தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் கட்டுபெத்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவித்த பொலிஸார், அவர்கள் அதிகளவு ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும் கூறினர்



