இனப்பிரச்சினை தீர்வு பேச்சுவார்த்தை: இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

இனப்பிரச்சினை தீர்வுக்கான அனைத்துக்கட்சி பேச்சுவார்த்தைகளை எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தபோதும், இன்னும் அது உறுதிப்படுத்தப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய, தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், இதனை குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அண்மையில் இனப்பிரச்சி;னைக்கான தீர்வு தொடர்பாக வினவியபோது, அனைத்துக்கட்சிகளும் அதற்கு இணக்கம் வெளியிட்டன.
இந்தநிலையில் முதல் கட்டமாக 13வது அரசியலமைப்பின்கீழ் வரும் அனைத்து அதிகாரங்களுடனும் 9 மாகாணசபைகளின் நிர்வாகங்களும் நடைமுறைப்படுத்தப்படவேண்டும்; என்று அடைக்கலநாதன் கோரிக்கையை முன்வைத்தார்.
இதன் பின்னர் தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான இறுதித்தீர்வு குறித்த திட்டத்தை முன்னெடுக்கலாம் என்று அவர் யோசனை வெளியிட்டார்.



