மோட்டார் சைக்கிளை எடுத்துச் செல்ல நிதி நிறுவன பிரதிநிதிகள் குழு மேற்கொண்ட முயற்சி தோல்வி
Prathees
2 years ago

தெமட்டகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்கு பலவந்தமாக நுழைந்து மோட்டார் சைக்கிளை எடுத்துச் செல்ல நிதி நிறுவன பிரதிநிதிகள் குழு மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது.
தெமட்டகொட பொலிஸ் நிலையப் பிரதான பொலிஸ் பரிசோதகர் கபில பண்டார உடனடியாகத் தலையிட்டு மோட்டார் சைக்கிளை எடுத்துச் செல்வதை தடுத்ததாக ஐக்கிய தேசிய சுயதொழில் வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் பிரதீப் சார்லஸ் தெரிவித்தார்
உரிய தவணைகள் செலுத்தப்பட்ட நிலையிலும் நிதி நிறுவன அதிகாரிகள் மோட்டார் சைக்கிளை எடுத்துச் செல்ல முற்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.



