கொழும்பு புதுக்கடை நீதிமன்றில் வழக்குகளுடன் தொடர்புடைய 44 பவுண் தங்கம் மாயம்
Prathees
2 years ago

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்தின் வழக்குக் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு வழக்குகளுடன் தொடர்புடைய 44 பவுணுக்கும் அதிகமான தங்க ஆபரணங்கள் திருடப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வாழைத்தோட்டம் பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பிலுள்ள இரண்டு பொலிஸ் நிலையங்கள் தொடர்பான வழக்குப் பொருட்களாக இந்த தங்க ஆபரணங்கள் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டு இருந்ததாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



