சுற்றுலாத்துறை மூலம் இலங்கை ஈட்டிய வருமானம் 107.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவு
Prabha Praneetha
2 years ago

2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சுற்றுலாத்துறை மூலம் இலங்கை ஈட்டிய வருமானம் 107.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, ஜனவரி தொடக்கம் நவம்பர் வரையான காலப்பகுதியில் சுற்றுலாத்துறையின் மொத்த வருவாய் 1,129.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.



