மீண்டும் மின்கட்டணத்தை உயர்த்தினால், ஆடை உற்பத்தி தொழில் நலிவடையும்  அபாயம்

Prathees
1 year ago
மீண்டும் மின்கட்டணத்தை உயர்த்தினால், ஆடை உற்பத்தி தொழில் நலிவடையும்  அபாயம்

மின்கட்டணத்தை மீண்டும் உயர்த்தினால் ஆடைத் தொழில் முற்றிலும் நலிவடையும் என வர்த்தக மண்டல ஊழியர்களின் தேசிய மையம் கூறுகிறது.

ஆடைத் துறையில் உள்ள பல பாரிய கைத்தொழில்களை நாட்டிலிருந்து எடுக்க ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதன் அழைப்பாளர் காமினி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இம்மாத இறுதியில் 03 ஆடைத் தொழிற்சாலைகளை நாட்டிலிருந்து விலக்கிக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வர்த்தக வலய ஊழியர் தேசிய மத்திய நிலையத்தின் அழைப்பாளர் காமினி ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபைக்கு ஏற்படும் நட்டத்தை குறைக்கும் வகையில் ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் மீண்டும் மின்சார கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் தயாராகி வருகின்றது.

இதற்கு அமைச்சர்கள் குழுவின் ஒப்புதல் ஏற்கனவே கிடைத்துள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இதன்படி, மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியைப் பெறுவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.

எவ்வாறாயினும், தற்போதைக்கு மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் ஜானக ரத்நாயக்க தமக்குக் கிடைத்துள்ள தரவுகளின்படி மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 70 வீத மின்சார கட்டணம் அதிகரிக்கப்படுமானால் அது மக்களால் தாங்க முடியாததாக இருக்கும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!