வட மாகாணத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையில் படகு சேவைகளை மீண்டும் ஆரம்பம்!

Prabha Praneetha
3 years ago
வட மாகாணத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையில் படகு சேவைகளை மீண்டும்  ஆரம்பம்!

துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சுக்கும் இந்திய அதிகாரிகளுக்கும் இடையில் வட மாகாணத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையில் படகு சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

குறித்த திட்டத்தின் கீழ் ஒரே நேரத்தில் 500 பயணிகளை ஏற்றிச் செல்லும் வசதிகள் கிடைக்கும்.

வரும் டிசம்பர் 11 முதல் சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே நேரடி விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி சென்னையில் இருந்து வாரத்திற்கு ஐந்து விமான சேவைகள் கோரப்பட்டுள்ளன.

சுற்றுலாப் பயணிகளை இலங்கையில் உள்ள கண்டி, நுவரெலியா மற்ற இடங்களுக்கு கொண்டு செல்வதற்கு சுற்றுலாத்துறை அதிகாரிகளும் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு விஜயம் செய்ய விரும்பும் குடும்பங்களுக்கு உதவவும், கடற்கரை விருந்தகங்களில் அவர்களது திருமண விழாக்களை நடத்தவும் ஏற்பாடுகள் செய்துக்கொடுக்கப்படும்.

மற்றொரு பகுதியினர் சூதாட்ட விடுதிகளுக்காக நாட்டிற்கு வருபவர்கள்.

இதேவேளை சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில்,எலையன்ஸ் எயார் யாழ்ப்பாணத்திற்கு வாரத்திற்கு மூன்று முறை பயணத்தை மேற்கொள்ளவுள்ளது.
இந்த விமானக் கட்டணங்கள் குறித்து முடிவெடுப்பது குறித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை தீர்மானிக்கப்படவுள்ளது.

இதற்கிடையில் யாழ்ப்பாணம் மற்றும் பிற நகரங்களுக்கு இடையே சுற்றுலாப்பயணிகள் விரைவாக செல்லும் வகையில், உள்நாட்டு விமான சேவையை ஆரம்பிப்பது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது .

மேலும் ,  பலாலியில் உள்ள யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் சுங்கப் பிரிவுகள் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4