மின்சாரக்கட்டண அதிகரிப்புக்கு தாம் இணக்கம் வெளியிடப்போவதில்லை - பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

Prabha Praneetha
1 year ago
மின்சாரக்கட்டண அதிகரிப்புக்கு தாம் இணக்கம் வெளியிடப்போவதில்லை - பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

இலங்கையின் மின்சாரக்கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்படுகின்றமைக்கு ஆளும் கட்சிக்குள்ளேயே எதிர்ப்புக்கள் வலுப்பெற்றுள்ளன.

ஏற்கனவே மின்சாரக்கட்டணம் கடந்த மாதத்தில் அதிக வீதத்தில் அதிகரிக்கப்பட்டது.

எனினும் கடந்த அமைச்சரவையில் மீண்டும் மின்சாரக்கட்டணம் அதிகரிக்கப்படவேண்டும் என்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

என்றாலும் மின்சாரக்கட்டண அதிகரிப்புக்கு தாம் இணக்கம் வெளியிடப்போவதில்லை என்று பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்தநிலையில், கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அண்மையில் நாடாளுமன்றில் உரையாற்றும்போது, மீண்டும் மின்சாரக்கட்டண அதிகரிப்புக்கு தாம் உடன்படவில்லை என்று குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அமைச்சரவைக்கு தெரியப்படு;த்தவுள்ளதாகவும் அவர் கூறினார்
இதனையடுத்து தற்போது ஆளும் பொதுஜன பெரமுனவின் முக்கிய உறுப்பினரான முன்னாள் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்த்தனவும் மின்சாரக்கட்டண அதிகரிப்புக்கு தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் மின்சார சபை, இலாபம் ஈட்டி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஓகஸ்ட் 10ஆம் திகதி முதல் நவம்பர் 30ஆம் திகதி வரையில் 1 பில்லியன் ரூபா இலாபத்தை மின்சார சபை பெற்றுள்ளது.

எனவே மீண்டும் கட்டண அதிகரிப்புக்கு செல்வது மக்கள் மீது பாரிய சுமையை ஏற்படுத்தும் என்று ரோஹித்த அபேகுணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!