தொலைபேசிகளில் தரவுகளை சேகரிக்க கொடுப்பனவு
Prabha Praneetha
2 years ago
-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1.jpg)
தரவு சேகரிப்பு மற்றும் விண்ணப்ப செயலாக்கத்திற்கு தனிப்பட்ட கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் பொது அதிகாரிகளுக்கு ஒரு விண்ணப்பத்திற்கு 150 ரூபாய் வீதம் கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது.
மில்லியன் கணக்கான ரூபாய் செலவாகும் இந்த திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி மற்றும் பொதுமக்களிடமிருந்து தரவு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள ஏனைய அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் இது பொருந்தும்
இந்தநிலையில் 103 தரங்களைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த உதவித்தொகைக்கு உரித்துடையவர்கள் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.



