தேர்தல் செலவுகள் தொடர்பில் வருகிறது இறுக்கச்சட்டம்!

Kanimoli
1 year ago
தேர்தல் செலவுகள் தொடர்பில் வருகிறது இறுக்கச்சட்டம்!

நாடாளுமன்றத்தில் தேர்தல் செலவு குறித்த விதிமுறைகள் அங்கீகரிக்கப்பட்ட பிறகு, அந்தந்த தேர்தல் தொகுதியில் உள்ள பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளரினதும் அதிகபட்ச செலவினத்தை தேர்தல் ஆணையம் தீர்மானிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகள் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்னதாக இந்த வாரம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.
குறிப்பிட்ட தேர்தலைப் பொறுத்தும், அந்தந்தப் பகுதியில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையையும் கருத்திற்கொண்டு அதிகபட்ச செலவினம் தேர்தல் ஆணையத்தால் தீர்மானிக்கப்படும்.
இதன்படி, உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு, அந்தந்த உள்ளுராட்சி மன்றங்களில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்துத் தொகை தீர்மானிக்கப்படும்.
மாகாண சபைத் தேர்தலுக்கு, வேட்பாளர் போட்டியிடும் நிர்வாக மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு, வேட்பாளர் போட்டியிடும் தேர்தல் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் செலவுகள் முடிவு செய்யப்படும்.
அதேநேரம் நாட்டில் பதிவான மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஜனாதிபதித் தேர்தலுக்கான செலவுகள் தீர்மானிக்கப்படும்.
விதிமுறைகளின்படி, ஒரு வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்ட தொகையை விட அதிகமாக தமது பிரசாரத்துக்கு செலவு செய்தால் அது அந்தந்த தேர்தல் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.
அரசாங்கத் திணைக்களம், பொதுக் கூட்டுத்தாபனம் அல்லது கம்பனிச் சட்டத்தின் கீழ் இணைக்கப்பட்ட நிறுவனம், வெளிநாட்டு அரசாங்கம், சர்வதேச அமைப்பு அல்லது இலங்கைக்கு வெளியில் இணைக்கப்பட்ட அல்லது பதிவுசெய்யப்பட்ட அமைப்பு அல்லது அடையாளம் வெளியிடப்படாத எந்தவொரு நபரிடமிருந்தும் புதிய சட்டத்தின்படி, நன்கொடைகள் தடைசெய்யப்பட்டுள்ளன.
அதேநேரம் தேர்தல் முடிவுகள் வெளியான 21 நாட்களுக்குள், வேட்பாளர்கள் நன்கொடைகள் அல்லது நன்கொடைகள் குறித்த விபரங்;களை அந்தந்த தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இதன்போது, அது நன்கொடையா, அன்பளிப்பா, கடனா, முன்பணமா அல்லது வைப்பா என்பதை அவர்கள் குறிப்பிட வேண்டும்.
அத்துடன் நன்கொடையாளரின் பெயர், முகவரி மற்றும் தேசிய அடையாள அட்டை எண் ஆகியவையும் குறிப்பிடப்பட வேண்டும் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!