பொலிஸ் உத்தியோகத்தருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற நபர் கைது
Prathees
2 years ago

பொலிஸ் உத்தியோகத்தருக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்ட நபரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கைது செய்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டாம் எனவும் பிணை கிடைக்கக்கூடிய வழக்கை ஒப்படைக்குமாறும் அவிசாவளை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிக்கு 50,000 ரூபா இலஞ்சமாக வழங்க முயற்சித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பொலிஸ் நிலையத் தளபதி இலஞ்ச ஊழல் விசாரணை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்
இன்று (04) அவிசாவளை பொலிஸ் நிலையத்திற்குள் 25,000 ரூபா பணத்தை வழங்கச் சென்ற போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ருவன்வெல்ல - அமித்திரிகல பிரதேசத்தை சேர்ந்த 32 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.



