கோப்பாய் வீதியில் கேக் வெட்டி  பிறந்தநாள் கொண்டாடிய 10 இளைஞர்கள் கைது

Prathees
3 years ago
கோப்பாய் வீதியில் கேக் வெட்டி  பிறந்தநாள் கொண்டாடிய 10 இளைஞர்கள் கைது

வீதியில் கேக் வெட்டி  பிறந்தநாள் தினத்தினை கொண்டாடிய குற்றச்சாட்டில் 10 இளைஞர்கள் கோப்பாய்  பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கோப்பாய் பகுதியில் வசிக்கும் குறித்த சட்ட வைத்திய அதிகாரி தனது கடமையின் நிமித்தம் நேற்றைய தினம் சனிக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் காரில் சென்று கொண்டிருந்த வேளை, கோப்பாய் நாவலர் பாடசாலை முன்பாக வீதியை மறித்து மோட்டார் சைக்கிளில் நின்ற இளைஞர்கள் குழுவொன்று பிறந்தநாள் தினத்தினை கொண்டாடிய வண்ணம் இருந்துள்ளனர்.

இளைஞர்கள் குழுவின் பிறந்தநாள் கொண்டாடத்தினால், அவ்வீதியூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டு இருந்தது. 

அதனால் சட்ட வைத்திய அதிகாரி தனது கடமைக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்ட்டமையால்,அது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். 

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அங்கு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த 10 இளைஞர்களை கைது செய்ததுடன், அங்கு நின்ற இரண்டு மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்களை கோப்பாய் காவல்நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4