திஸ்ஸ குட்டியராச்சி தம்முடன் எடுத்து வந்த ரணிலின் புகைப்படம்!

அரசாங்கத்துக்குள்; பெரும்பான்மை அங்கத்தவர்களைக் கொண்டிருக்கும் பொதுஜன பெரமுனவின் சர்ச்சைக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், அடுத்த தேர்தலில் ரணிலின் புகைப்படத்தை பயன்படுத்தியே வாக்குக் கேட்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகையில் அண்மையில் பிரதமர் தினேஸ் குணவர்த்தன, விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.
அதில் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
கடந்த தேர்தலில் பொதுஜன பெரமுனவின் கீழ் போட்டியிட்ட ஒரு காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரான திஸ்ஸ குட்டியாராச்சியும் இந்த விருந்தில் கலந்து கொண்டார்.
இதன்போது, ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட போது எடுக்கப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் புகைப்படத்தையும் அவர் தம்முடன் கொண்டு வந்திருந்தார்.
அந்த புகைப்படத்தை இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிடம் காட்டிய அவர்,இது அடுத்த தேர்தலுக்கு நான் பயன்படுத்தும் புகைப்படம் இதுதான் என்று கூறினார்.
இதற்கு பதிலளித்த லொஹான் ரத்வத்த, நீங்கள் அதை இராஜாங்க அமைச்சு நியமனங்கள் செய்யப்படுவதற்கு முன்பே இதனைக் காட்டியிருக்க வேண்டும். என்று குறிப்பிட்டார்.
இதற்கு குட்டியாராச்சி இவ்வாறு பதிலளித்தார் 'இப்போது கொடுக்கப்பட்டாலும், நான் அதனை மறுக்கமாட்டேன்' என்பதே அவரின் பதிலாக இருந்தது.



