தொழில்நுட்பம் மற்றும் கார்ப்பரேட் துறையில் இருந்து 600 ஊழியர்களை பணி நீக்கம் செய்த ஓயோ நிறுவனம்
Prasu
2 years ago
உலகம் முழுவதும் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாகவே தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்து பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றன.
இதனால் ஊழியர்கள் மத்தியிலும் சற்று கலக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஓயோ நிறுவனமும் தொழில்நுட்பம் மற்றும் கார்ப்பரேட் துறையில் இருந்து 600 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்காலத்தில் மீண்டும் பணியில் மனம் செய்யப்படும் போது பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தற்போது உளவு மேலாண்மை குழுவில் 250 பேர் புதிதாக பணியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.



