பணிகளை முடித்துவிட்டு 6 மாதங்களுக்கு பிறகு பத்திரமாக பூமிக்கு திரும்பிய 3 சீன விண்வெளி வீரர்கள்

Prasu
1 year ago
பணிகளை முடித்துவிட்டு 6 மாதங்களுக்கு பிறகு பத்திரமாக பூமிக்கு திரும்பிய 3 சீன விண்வெளி வீரர்கள்

சீனா விண்வெளியில் தனக்கென 'தியான்ஹே' என்கிற விண்வெளி நிலையத்தை அமைத்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் விண்வெளி நிலைய கட்டுமானத்தை முடிக்க சீனா திட்டமிட்டுள்ளது. 

அப்படி தயாராகும் பட்சத்தில் சொந்தமாக விண்வெளி நிலையம் வைத்திருக்கும் ஒரே நாடாக சீனா இருக்கும்.

'தியான்ஹே' விண்வெளி நிலையத்தை கட்டமைப்பதற்காக சீனா சுழற்சி முறையில் விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பி வருகிறது. 

அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் 5-ந்தேதி ஷென்சோ-14 விண்கலத்தில் 3 விண்வெளி வீரர்களை சீனா விண்ணுக்கு அனுப்பியது. அங்கு அவர்கள் கடந்த 6 மாத காலமாக விண்வெளி நிலையத்தை அமைப்பது தொடர்பான பல்வேறு பணிகளை மேற்கொண்டனர். இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு 'தியான்ஹே' விண்வெளி நிலையத்தின் இறுதி கட்ட பணிகளுக்காக புதிதாக 3 விண்வெளி வீரர்கள் விண்ணுக்கு அனுப்பட்டனர்.

அதனை தொடர்ந்து 6 மாதங்களாக விண்வெளி நிலையத்தில் தங்கி பணிகளை மேற்கொண்டு வந்த 3 விண்வெளி வீரர்களும் நேற்று ஷென்சோ-14 விண்கலத்தில் பூமிக்கு புறப்பட்டனர். 

இந்த விண்கலம் சீனாவின் மங்கோலியா பிராந்தியத்தில் பத்திரமாக தரையிறங்கியது. இதையடுத்து அங்கு தயார் நிலையில் இருந்த டாக்டர்கள் விண்வெளி வீரர்களின் உடல் நிலையை பரிசோதித்து அவர்கள் நலமாக இருப்பதாக தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!