அத்தியாவசிய சேவையை கருத்திற்கொண்டு வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி

Kanimoli
1 year ago
அத்தியாவசிய சேவையை கருத்திற்கொண்டு வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி

பொதுக் கூட்டுத்தாபனம் அல்லது அரசாங்கம் வழங்கும் அத்தியவசிய பொதுச் சேவைகளின் அவசியத்தைக் கருத்தில் கொண்டு,விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
1979 ஆம் ஆண்டு இலக்கம் 61 ஆம் இலக்க பொதுச் சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் ஜனாதிபதியின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பி.ஏகநாயக்கவினால் இந்த வர்த்தமானி டிசம்பர் 3இல் வெளியிடப்பட்டது.
அதன்படி, மின்சார விநியோகம், பெட்ரோலிய பொருட்கள் விநியோகம் மற்றும் எரிபொருள் ஆகியவை அத்தியாவசிய பொது சேவைகளாக கருதப்படும்.
மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் பிற ஒத்த நிறுவனங்களில் நோயாளிகளுக்கு பராமரிப்பு, வரவேற்பு, கவனிப்பு உணவு, சிகிச்சை தொடர்பாக செய்ய வேண்டிய அனைத்து சேவை, வேலை, உழைப்பு, என்பனவும் இந்த வர்த்தமானியில் சேர்க்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!