இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் அதிவிசேடம் மதுபான வகையின் விலை குறைக்கப்பட்டுள்ளது
Kanimoli
2 years ago

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் அதிவிசேடம் மதுபான வகையின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே. குணசிறி தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி 750 மில்லி லீட்டர் மதுபான போத்தலின் விலை 80 ரூபாவினாலும், 375 மில்லி லீட்டர் மதுபான போத்தலின் விலை 60 ரூபாவினாலும், 180 மில்லி லீட்டர் மதுபான போத்தலின் விலை 20 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது
நாடு முழுவதிலும் மதுபான விற்பனை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



