அமைச்சரவையில் மாற்றம்-இவ்வாரத்தில் அமைச்சரவை அமைச்சர்களாக மூவர் சத்தியப்பிரமாணம்?
Nila
2 years ago

புதிய அமைச்சரவை அமைச்சர்கள் சிலர் இவ்வாரத்தில் பதவிப் பிரமாணம் செய்யத் தயாராக உள்ளதாக அரசியல் தகவல் தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, முன்னாள் அமைச்சர்களான குமார வெல்கம, ராஜித சேனாரத்ன மற்றும் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் புதிய அமைச்சரவை அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக குறித்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களான குமார் வெல்கம போக்குவரத்து அமைச்சராகவும் ராஜித சேனாரத்ன சுகாதார அமைச்சராகவும் எதிர்வரும் நாட்களில் பதவிப்பிரமாணம் செய்து கொள்ள தயாராக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க மின்சக்தி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக குறித்த தகவல் தரப்புகள் தெரிவிக்கின்றன.



