இரா. சாணக்கியனின் மக்கள் சந்திப்பு காரியாலத்தின் பெயர் பலகை அடையாளம் தெரியாதவர்களால் சேதம்
Kanimoli
2 years ago

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் மட்டக்களப்பில் அமைந்துள்ள மக்கள் சந்திப்பு காரியாலத்தின் பெயர் பலகை அடையாளம் தெரியாதவர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினமே இந்த பெயர் பலகை சேதமாக்கப்பட்டுள்ளது என முறைப்பாடு செய்யப்பட்டதாக மட்டக்களப்பு தலைமைக காவல்துறையினர் தெரிவித்தனர்
காரியாலயம் பூட்டப்பட்டிருந்த நிலையில் அங்கு நாடாளுமன்ற உறுப்பினரின் புகைப்படத்துடன், காரியாலய சந்திப்பு திகதியிடப்பட்ட பிரசுரம் பெயர்பலகையில் ஒட்டப்பட்டிருந்த நிலையிலேயே விசமிகளால் சேதமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



