பிரித்தானிய ஹோட்டலில் கைவரிசை - 200,000 பவுண்ட்கள் கொள்ளையடித்த பெண்

பிரித்தானிய ஹோட்டல் ஊழியர் ஒருவர் ஹோட்டலுக்கு தங்க வரும் விருந்தினர்களின் கிட்டத்தட்ட 200,000 பவுண்ட்கள் மதிப்புள்ள நகைகள் மற்றும் கிரெடிட் அட்டைகள் திருடியதை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.
ருமேனிய நாட்டை சேர்ந்த சப்ரினா ரோவா என்ற 23 வயதுடைய யுவதியே இந்த செயலில் ஈடுபட்டுள்ளார்.
ஜூலை மாதம் 7 ஆம் திகதி முதல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அருகில் பார்க் லேனில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் பணிபுரிந்து வந்தார்.இந்த நிலையில் ஹோட்டலுக்கு அருகில் கடையில் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக ரோவா கிரெடிட் அட்டை ஒன்றை பயன்படுத்தியுள்ளார்.
இதன் மூலமே அவரது திருட்டு சம்பவங்கள் தொடர்பில் கண்டுபிடிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த பெண் ஒரு கொள்ளை கும்பலின் உறுப்பினர் என சட்டதரணி Alex Matthews நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பெண் ஹோட்டலில் தங்க வந்த விருந்தினர் ஒருவரின் 187,000 பவுண்ட்களை கொள்ளையடித்துள்ளார்.கைது செய்யப்பட்ட பெண் நீதிமன்றத்தில் வைத்து மன்னிப்பு கோரியுள்ளார். அவர் 3 வருடங்கள் சிறையில் அடைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.



