போக்குவரத்துசபை தலைவருக்கு அமைச்சர் பிறப்பித்துள்ள உத்தரவு!

Prathees
1 year ago
போக்குவரத்துசபை தலைவருக்கு அமைச்சர் பிறப்பித்துள்ள உத்தரவு!

போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்கவை உடனடியாக பதவி விலகுமாறு அமைச்சர் அறிவித்துள்ளார்.

நாட்டு மக்களின் நலனுக்காக அரசாங்கம் எடுத்த தீர்மானங்களை நடைமுறைப்படுத்தத் தவறியமைக்காக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி விலகுமாறு இலங்கை போக்குவரத்து சபையின் தலைவருக்கு இலங்கை போக்குவரத்து அமைச்சர் அறிவித்துள்ளார்.

2005 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க இலங்கை போக்குவரத்துச் சபைச் சட்டத்தின் அடிப்படையில், இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்கவை உடனடியாக பதவி விலகுமாறு அமைச்சர் அறிவித்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அமைச்சரவையினால் எடுக்கப்பட்ட தீர்மானங்களை இலங்கை போக்குவரத்து சபை வேண்டுமென்றே அமுல்படுத்த தவறியமையே இந்த தீர்மானத்திற்கு முக்கிய காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, இலங்கை போக்குவரத்து சபையின் பணிப்பாளர் சபை மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு கிங்ஸ்லி ரணவக்கவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!