ஹோமாகம பிரதேசத்தில் ஒரு பிள்ளையின் தந்தை ஒருவர் தனது வீட்டின் கூரையில் தூக்கிட்டு தற்கொலை

Kanimoli
3 years ago
ஹோமாகம பிரதேசத்தில் ஒரு பிள்ளையின் தந்தை ஒருவர் தனது வீட்டின் கூரையில் தூக்கிட்டு தற்கொலை

ஹோமாகம பிரதேசத்தில் ஒரு பிள்ளையின் தந்தை ஒருவர் தனது வீட்டின் கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இளம் தந்தை ஒருவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

ஹோமாகம, வடக்கு பிட்டிபன, ஹெட்டிகொடவில் வாடகை வீட்டில் தங்கியிருந்த தோமஸ் திஸாநாயக்க கலன மதுசங்க என்ற 28 வயதுடைய நபரே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளதாக மீகொட காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்

கூலி வேலை செய்து சம்பாதித்து வரும் இவர், கடந்த சில நாட்களாக வேலை இல்லாத நிலையில் மனமுடைந்துள்ளார். அடிக்கடி தற்கொலை செய்து கொள்ள நினைப்பதாகவும் மனைவியிடம் கூறியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அதேவேளை, இரண்டு வயது மகளின் தந்தையான அவர், குடும்பம் வாழ சரியான வழி இல்லாததால் 15 முறைக்கு மேல் தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்து கடிதம் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4