கொழும்பு சுகதாச விளையாட்டு அரங்கில் தேசிய அளவில் சாதித்த பூநகரி முழங்காவில் மகா வித்தியாலய மாணவன்
Mayoorikka
2 years ago

கொழும்பு சுகதாச விளையாட்டு அரங்கில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகளில் 5000 மீட்டர் ஓட்ட போட்டியில் கிளி/பூநகரி முழங்காவில் மகா வித்தியாலய மாணவன் சுமன் கீரன் அவர்கள் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.
இவரையும் பெற்றோர்களையும் வாழ்த்துவதுடன் இவருக்கு பயிற்சி வழங்கிய ஆசிரியர்கள் ரோஸ்கோ ,கமலினி மற்றும் பயிற்றுவிப்பாளர் எடிசன் ஆகியோருக்கும் பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துகின்றோம்.
இம்மாணவன் தேசிய மட்ட மரதன் ஓட்டபோட்டியில் இரண்டாம் இடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.





