ஜனவரி முதல் தினமும் 8 மணி நேரம் மின்வெட்டு
Prabha Praneetha
2 years ago
-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1.jpg)
உத்தேச மின்சாரக் கட்டணத் திருத்தங்கள் அமுல்படுத்தப்படாவிட்டால், அடுத்த வருடம் முதல் நாளாந்தம் 6 முதல் 8 வரையான மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள அமைச்சர், எதிர்வரும் ஜனவரி மாதம் மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும்.
"ஒரு யூனிட் மின்சாரத்தின் உற்பத்திச் செலவு 56.90 ரூபாயாகும். இலங்கை மின்சார சபையின் செலவினங்களைச் சமாளிக்க 420 பில்லியன் ரூபா தேவைப்படுகிறது," என்று அவர் கூறினார்.
"இலங்கை மின்சார சபை தனியார் மின் உற்பத்தி நிலையங்களுக்கு 70 பில்லியன் ரூபாயும், சிறிய அளவிலான மின்சார விநியோகஸ்தர்களுக்கு 40 பில்லியன் ரூபாயும் செலுத்த வேண்டியுள்ளது.



