உணவுப் பாதுகாப்பின்மை போன்ற பல விடையங்களால் இலங்கை தொடர்ந்தும் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது!

Mayoorikka
1 year ago
உணவுப் பாதுகாப்பின்மை போன்ற பல விடையங்களால் இலங்கை தொடர்ந்தும் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது!

உணவுப் பாதுகாப்பின்மை, அச்சுறுத்தப்பட்ட வாழ்வாதாரங்கள், மற்றும் அத்தியாவசிய மருந்துகளின் பற்றாக்குறை, அத்துடன் அதிகரித்து வரும் பாதுகாப்புக் கவலைகள் போன்றவற்றால் இலங்கை தொடர்ந்தும் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகளுக்கான ஆசிய மற்றும் பசுபிக் பிராந்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.

2021- 2022 பெரும்போக விவசாய உற்பத்தியில் 40 சதவீத குறைவும், 2022 சிறுபோகப் பருவத்தில் 50 சதவீத உற்பத்தி குறைவும் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.

2022- 2023 பெரும்போகப் பருவத்திற்கான உற்பத்திக் குறைவு, அக்டோபர் மாதத்தில் 85.6 சதவீத உணவுப் பணவீக்கத்துடன் இணைந்து, மக்களின் தேவைகளில், பாரிய சிரமங்களை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் உணவுப் பாதுகாப்பு நிலைமையை பொறுத்தவரையில், பத்தில் மூன்று குடும்பங்கள் போதுமான உணவை உட்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதில் குறைவான மற்றும் மாறுபட்ட உணவுகளை உட்கொள்வது அடங்கும்.

இதேவேளை உலக வங்கியின் கூற்றுப்படி, உலகில் உணவுப் பொருட்களின் விலையேற்றத்தில் இலங்கை தற்போது 6வது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!