இந்தோனேசியா நிறைவேற்றிய சர்ச்சைக்குரிய சட்டம்-திருமணத்திற்கு முன் தவறான தொடர்புகள் இருந்தால் கடும் தண்டனை!

Nila
1 year ago
இந்தோனேசியா நிறைவேற்றிய சர்ச்சைக்குரிய சட்டம்-திருமணத்திற்கு முன் தவறான தொடர்புகள் இருந்தால் கடும் தண்டனை!

இந்தோனேசிய நாடாளுமன்றம் இன்று ஒரு குற்றவியல் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

இந்த புதிய குற்றவியல் சட்டத்தில் திருமணத் தொடர்பு அல்லாதவருடன் உடலுறவு கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

தனது துணை தவிர்ந்த ஏனையோருடன் உடலுறவுகொள்பவர்களுக்கு ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை அளிக்கப்படுமென அந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தோனேசியர்களுக்கும், அந்நாட்டுக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கும் இந்த புதிய சட்டம் பொருந்தும்.

அத்துடன், திருமணமாகாத இருவர் தம்பதிகளாக இணைந்து வாழ்வதையும் இந்த சட்டம் தடை செய்கிறது.

இந்த சட்டம் அனைத்து அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளை பயமுறுத்தும் மற்றும் முதலீட்டுக்கு தீங்கு விளைவிக்கும் என்ற வணிக குழுக்களின் எச்சரிக்கைகளை மீறி இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இருப்பினும், வரைவு விதிமுறைகளை செயல்படுத்த அனுமதிக்கும் வகையில், மூன்று ஆண்டுகளுக்கு இந்த சட்டம் நடைமுறைக்கு வராது.

உலகின் மிகப்பெரிய முஸ்லிம் நாடான இந்தோனேசியாவில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்தை சில விமர்சகர்கள் வரவேற்றாலும், இந்த சட்டத்தின் சில சரத்துக்கள் ஷரிஆவால் தூண்டப்பட்ட சட்டங்களை வலுப்படுத்தலாம் என்றும் மாற்றுப்பாலின மக்களுக்கு ஒரு குறிப்பிட்ட அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனவும் சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!