சப்த கன்யா சரணாலயத்தில் முகாமிட்டிருந்த மருத்துவர்கள் கைது...

Prathees
2 years ago
சப்த கன்யா சரணாலயத்தில் முகாமிட்டிருந்த மருத்துவர்கள் கைது...

நாட்டில் மிக மோசமான விமான விபத்து இடம்பெற்ற நோர்டன்பிரிட்ஜ் சப்த கன்யா இயற்கை சரணாலயத்திற்கு உரிய அனுமதியின்றி பல நாட்களாக காப்புக்காட்டுக்குள் முகாமிட்டிருந்த மூன்று வைத்தியர்கள் உட்பட ஆறு பேர் (05) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பின்னர் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டதாக நல்லதண்ணி வனஜீவராசிகள் காரியாலயத்தின் வனவிலங்கு தள காவலர் பிரபாஷ் கருணாதிலக்க தெரிவித்தார்.

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையைச் சேர்ந்த மூன்று வைத்தியர்களும் அவர்களது நண்பர்கள் மூவரும் கடந்த 2ம் திகதி  பிற்பகல் நோர்டன்பிரிட்ஜ் சப்த கன்யா இயற்கை சரணாலயத்திற்குள் பிரவேசித்தனர்.

பின்னர் குறித்த குழுவினர் காணாமல் போயுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் நோர்டன்பிரிட்ஜ் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் நல்லதண்ணி வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் இணைந்து காணாமல் போன குழுவை தேடும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

அந்த நடவடிக்கையின் போது அனுமதியின்றி சப்த கன்யா இயற்கை சரணாலயத்திற்குள் பிரவேசித்த ஆறு பேர்இ காப்புக்காட்டை விட்டு வெளியே வந்த போது கைது செய்யப்பட்டதாக பிரபாஷ் கருணாதிலக்க தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட ஆறு பேரில் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் பெண் வைத்தியரும் அடங்குவதாக பிரபாஷ் கருணாதிலக்க தெரிவித்தார்.

வனவிலங்குப் பூங்காக்கள் மற்றும் இயற்கைக் காப்பகங்களுக்குள் நுழைபவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் 1992 என்ற அவசர இலக்கத்துக்குத் தெரிவிக்குமாறும்இ வனவிலங்கு பணிப்பாளர் நாயகத்தின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி எவரும் காப்புக்காடுகளுக்குள் நுழைய முடியாது என்றும் பிரபாஷ் கருணாதிலக்க பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!