7 பொலிஸ் பிரிவுகளில் கொள்ளையிட்ட இரு பெண்கள் உட்பட 6 பேர் கைது
Prathees
2 years ago

பொரலஸ்கமுவ, பிலியந்தலை, கஸ்பேவ, கஹத்துடுவ, ஹொரணை உள்ளிட்ட 7 பொலிஸ் பிரிவுகளில் 15 கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இரு பெண்கள் உட்பட 6 பேரை பிலியந்தலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் அவரது மகனும் உள்ளடங்குவதாகவும், ஒரு பெண்ணைத் தவிர மற்ற அனைவரும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களில் ஒருவர் பெண்ணின் நகையை கொள்ளையடிப்பது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



