ரஷ்யா விமானத் தளங்கள் மீது டிரோன் தாக்குதலை நடாத்திய உக்ரைன்

#Russia
Keerthi
2 years ago
 ரஷ்யா விமானத் தளங்கள் மீது  டிரோன் தாக்குதலை நடாத்திய உக்ரைன்

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதை விரும்பாத ரஷ்யா அதன் மீது கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய போர், 9 மாதங்களை கடந்து நீடிக்கிறது.

இதில் மேற்கத்திய நாடுகள், ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு உதவியாக ஆயுதங்கள், போர் கப்பல்கள், விமானங்களை வழங்கி வருகின்றன. 

இதனிடையே, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி `தெற்கு ரோஸ்டோவ் பகுதியில் இருந்து காஸ்பியன் கடல்பகுதியில் ரஷ்யா ஏவிய 38 ஏவுகணைகள், கருங்கடல் பகுதியில் இருந்து ஏவிய 22 ஏவுகணைகள் என நேற்று முன்தினம் ரஷ்ய படையின் 60 ஏவுகணைகளை வழிமறித்து அழித்தனர்.

இந்த ஏவுகணை தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர்,' என்று தெரிவித்தார். குளிர்காலம் நெருங்குவதால், உக்ரைன் படையினருக்கு முடிந்தளவு இழப்பை ஏற்படுத்த வேண்டும் என்று ரஷ்யா பல்வேறு பகுதிகளில் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. 

இந்நிலையில், தனது நாட்டின் 2 விமானத் தளங்கள் மீது உக்ரைன் படைகள் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!