பிரித்தானியாவில் பல பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை! சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு

Nila
3 years ago
பிரித்தானியாவில் பல பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை! சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு

பிரித்தானியா முழுவதும் குளிர் காலம் தொடங்குவதால், வாகன ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களில் சூடான ஆடைகள், போர்வைகள் மற்றும் தேநீர் flasks போன்றவற்றை வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த வாரம் உறைபனி, பனிமூட்டமான நிலையில் வாகனம் ஓட்டுபவர்கள் கடும் நெருக்கடிகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

இதனால் வீதியில் வாகன செயலிழப்புகள் ஏற்பட்டால், சூடாக இருக்க தயாராக வேண்டும் என்று பிரித்தானியா வாகன சேவை நிறுவனம் தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஒரே இரவில் பல இடங்களில் -10 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை வீழ்ச்சியடையும் என கணிக்கப்பட்டுள்ளதுடன், மற்ற இடங்களில் -6 பாகை செல்சியஸ் வரை காணப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

பிரித்தானியாவில் கடுமையான குளிர் காலநிலை எச்சரிக்கை தற்போது தொடங்கியுள்ளதென ஏற்கனவே எச்சரிக்க விடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு நிறுவனம் வழங்கிய மூன்றாம் நிலை எச்சரிக்கை டிசம்பர் மாதம் 12ஆம் திகதி காலை 9:00 மணி வரை காணப்படும் எனவும் இந்த நிலைமைகள் மக்களின் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

300 க்கும் மேற்பட்ட அஞ்சல் குறியீடு பகுதிகளில் தகுதியான நபர்களுக்கு 25 பவுண்ட் குளிர் கால கொடுப்பனவுகளை அரசாங்கம் வழங்கப்படவுள்ளாது.

வாரத்தில் மேலும் கடுமையான வானிலை எச்சரிக்கைகள் தேவைப்படலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போதைய கணிப்புகளுக்கமைய, அடுத்த வாரத்தில் பல இடங்களில், வெப்பநிலை ஆண்டின் சராசரிக்கும் குறைவாக காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

வடக்கு ஸ்காட்லாந்தில் உரைப் பனி மற்றும் பனிக்கான மஞ்சள் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4