நாளை பாடசாலைகளை மூடுமாறு இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கம் கோரிக்கை

Prathees
3 years ago
நாளை  பாடசாலைகளை மூடுமாறு இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கம் கோரிக்கை

நாடு முழுவதும் வளிமண்டலம் மோசமாக உள்ளதால் பாடசாலைகளை மூடுமாறு இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கல்வி அமைச்சருக்கு இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கம் எழுதியுள்ள கடிதத்தில் அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில், 

தற்போது நாடு முழுவதும் வளிமண்டலம் மோசமாக உள்ளது. மலையகப் பிரதேசங்களில் பலத்த சூறாவளியுடன் குறிர்ந்த காலிலையும் மாறியுள்ளது.

வடக்கு கிழக்கு பிரதேசங்களில்  மிகையான குளிருடன் மழையும் அச்சுறுத்தலான தூசுகள் நிறைந்த காற்றும்  வீசும் என ஆளுநர்களால் எச்சரிக்கப்பட்டுள்ளது.

நாளை பாடசாலை மாணவர்கின் பாதுகாப்பு போக்குவரத்து என்பவற்றில் கவனம் செலுத்தி பாடசாலைகளை நடாத்துவது தொடர்பாக  அவசரத் தீர்மானம் எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நாளை இன்று மாதிரியான சூழ்நிலை நிலவுமாக இருந்தால் மாணவர்களை பெற்றோர் பாடசாலைக்கு அனுப்புவதில் அச்சம் கொண்டுள்ளனர். ஆiகால் நாளைய தினம் பாடசாலைகளை மூடுவதே பொருந்தும் என  பலரும் கருதுவதால் பொருத்தமான முடிவினை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என மேலும் குறிப்பிடப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4