பிரித்தானியாவில் ஒரு தசாப்த கால பொருளாதார வளர்ச்சியை இழக்க நேரிடும் அபாயம்

Nila
3 years ago
பிரித்தானியாவில் ஒரு தசாப்த கால பொருளாதார வளர்ச்சியை இழக்க நேரிடும் அபாயம்

பிரித்தானியாவில் பொருளாதாரம் சுருங்கும் நிலை அடுத்த ஆண்டு வரை நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் நிறுவனங்கள் முதலீடு செய்யவில்லை என்பதனால் விலை உயர்கிறது மற்றும் பொருளாதாரம் சுருங்கும் நிலை அடுத்த ஆண்டு வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் மிகப்பெரிய வணிகக் குழுவான பிரித்தானியா தொழில் கூட்டமைப்பு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இந்த நிலைமையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், பிரித்தானியா ஒரு தசாப்த கால பொருளாதார வளர்ச்சியை இழக்க நேரிடும் என பிரித்தானியா தொழில் கூட்டமைப்பின் தலைவர் டோனி டேங்கர் தெரிவித்துள்ளார்.

தங்களுக்கு தேவையான ஆட்களும் இல்லை, உற்பத்தித்திறனும் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

பிரித்தானியாவின் பொருளாதாரம் தற்போது கடுமையான மந்தநிலையில் இருப்பதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

 நீண்ட கால உற்பத்தித்திறனையும் பொருளாதார வளர்ச்சியையும் அதிகரிக்க இப்போது நடவடிக்கை அவசியம் என 190,000 பிரித்தானிய வணிகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரித்தானியா தொழில் கூட்டமைப்பு மேலும் கூறியது.

அடுத்த ஆண்டு பொருளாதாரம் 0.4 சதவீதம் சுருங்கும் என்று பிரித்தானியா தொழில் கூட்டமைப்பு எதிர்பார்க்கிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4