இலங்கை முழுவதும் அதிக குளிருடனான வானிலை - வெளியான காரணம் !

Nila
3 years ago
இலங்கை முழுவதும் அதிக குளிருடனான வானிலை  - வெளியான காரணம் !

நாடளாவிய ரீதியில், 60 சுற்றுப்புறக் காற்று தரக் கண்காணிப்பு நிலையங்களை நிறுவ திட்டமிட்டுள்ளதாக, மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. அரச நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக, அதிகார சபைத் தலைவர் சுபுன் எஸ். பத்திரகே தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமை, மிக குறுகிய காலத்தில், சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.யாழ்ப்பாணத்தில், சுற்றுப்புறக் காற்று தரக் கண்காணிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற  நிலையங்களை நாட்டின் ஏனைய பாகங்களிலும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதற்கமைய, தரவுகளைப் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியும் என மத்திய சுற்றாடல் அதிகார சபைத் தலைவர் சுபுன் எஸ். பத்திரகேதெரிவித்துள்ளார்.

சுமார் ஒரு தசாப்தத்தின் பின்னர் நாட்டின் வளிமண்டலத்தில், அதிகளவான தூசுத் துகள்கள் நேற்றைய தினம் படிந்ததாக மத்திய சுற்றாடல் அதிகாரச் சபை தெரிவித்துள்ளது.

மெண்டௌஸ் சூறாவளியினால் இந்தியாவில் இருந்து தூசுத் துணிக்கைகள் அதிகளவில் நாட்டில் சூழ்ந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சுற்றாடல் பாதுகாப்பு பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் சஞ்ஜய ரத்நாயக்க குறிப்பிட்டார்.

இவ்வாறான நிலையில், நாடளாவிய ரீதியில், அதிக குளிருடனான வானிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தூசுப் படிமங்கள் இன்று முதல் குறைவடையும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4