போயிங் விமானங்களுக்கு சவாலாக அமையும் சீனாவில் தயாரிக்கப்பட்ட முதல் பயணிகள் விமானம் விநியோகம்!

Mayoorikka
3 years ago
போயிங் விமானங்களுக்கு சவாலாக அமையும் சீனாவில் தயாரிக்கப்பட்ட முதல் பயணிகள் விமானம் விநியோகம்!

போயிங் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்களுக்கு மாபெரும் சவாலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படும் சீனாவில் தயாரிக்கப்பட்ட  புதிய பயணிகள் விமானம் இன்று விநியோகிக்கப்பட்டது.

ஷாங்காய் நகரிலுள்ள விமான நிலையத்தில் வைத்து, சைனா ஈஸ்டர்ன் எயார்லைன்ஸ் நிறுவனத்திடம் இவ்விமானம் கையளிக்கப்பட்டது.

சி919  (C919) எனும் இவ்விமானம், 164 பயணிகளுக்கான ஆசனங்களைக் கொண்டுள்ளது.
அடுத்த வருட முற்பகுயில் தனது முதலாவது வணிக ரீதியான பறப்பை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சி919 ரக விமானத்தின் 300 விமானங்களுக்கு கொள்வனவு கட்டளைகள் கிடைத்துள்ளதாக சீன அரசுக்குச் சொந்தமான கொமர்ஷல் எயார்குரொப்ட் கோர்ப் ஒவ் சைனா நிறுவனம் கடந்த மாதம் தெரிவித்திருந்தது.

இது 4,075 முதல் 5,555 கிலோமீட்டர் (2,532 - 3452 மைல்) வேகத்தில் பறக்கும் சக்தியுடையது என்பதும்  குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4