மண்டோஸ் சூறாவளியின் தாக்கம்: யாழ் மாவட்டத்தில் 142 பேர் பாதிப்பு! யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு

Mayoorikka
3 years ago
மண்டோஸ் சூறாவளியின் தாக்கம்: யாழ் மாவட்டத்தில் 142 பேர் பாதிப்பு! யாழ்  மாவட்ட அனர்த்த  முகாமைத்துவ பிரிவு

 யாழ்ப்பாண மாவட்டத்தில் மண்டோஸ்  சூறாவளியின் தாக்கத்தினால் நேற்று மாலையிலிருந்து நிலவிய கடும் காற்றுடனான சீரற்ற  காலநிலையின் காரணமாக தற்போது வரை 31 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்  மாவட்டஅனர்த்த  முகாமைத்துவ  பிரதிப் பணிப்பாளர் ரி என் சூரியராஜ்தெரிவித்தார்

38 குடும்பங்களைச் சேர்ந்த142  பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 2 சிறுதொழில் முயற்சியாளர்கள்பாதிக்கப்பட்டுள்ளது சண்டிலிப்பாயில்  ஆரம்ப சுகாதார வைத்திய நிலையம் உடுவில் பகுதியில் உள்ள புற்றுநோய் பராமரிப்பு நிலைய பெண்கள் விடுதியில் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பாக நல்லூர் ,பருத்தித் துறை ஊர்காவற்துறை கரவெட்டி பிரதேச செயலர் பிரிவுகளில் பாதிப்புகள் கூடுதலாக உணரப்பட்டுள்ளது

 மழை வீழ்ச்சி தொடர்ச்சியாக நாளை வரை  எதிர்பார்க்கப்படுவதனால் பொதுமக்கள் தமக்குரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தெரிவித்தார்,

இதேவேளை அதிக குளிர் காரணமாக பல கால்நடைகள் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4