உள்ளூராட்சி தேர்தலை நடத்த 10 பில்லியன் ரூபா செலவாகும்: தேர்தல்கள் ஆணையகம் தகவல்

Mayoorikka
3 years ago
 உள்ளூராட்சி தேர்தலை நடத்த 10 பில்லியன் ரூபா செலவாகும்: தேர்தல்கள் ஆணையகம் தகவல்

உள்ளூராட்சி தேர்தலை நடத்த  செலவாகும் பணம் தொடர்பில் என்று தேசிய தேர்தல்கள் ஆணையகம்  தகவல் வெளியிட்டுள்ளது 

இந்நிலையில் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த 10 பில்லியன் ரூபா செலவாகும் என தேர்தல்கள் ஆணையகம் குறிப்பிட்டுள்ளது. 

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்டத்தினூடாக இந்த செலவுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களத்தின் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் டிசம்பர் இறுதி வாரத்தில் கோரப்படும் என ஆணைக்குழு கடந்த வியாழக்கிழமை (8) அறிவித்துள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் (திருத்தம்) சட்ட விதிகளின்படி வேட்புமனுக்கள் கோரப்படும் என்று ஆணைக்குழு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மட்டத்தில் 2022 வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
அதன்படி 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்திருந்தமைக்கு குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4