கொழும்பு - வத்தளையை சேர்ந்த V. M. ஆசீர்வாதம் அவர்கள் காலமானார் - (தகவல்கள் உள்ளே)

Reha
1 year ago
கொழும்பு - வத்தளையை சேர்ந்த V. M. ஆசீர்வாதம் அவர்கள் காலமானார் - (தகவல்கள் உள்ளே)

கண்டியை பிறப்பிடமாகவும், கொழும்பு - வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட V. M. ஆசீர்வாதம் அவர்கள் 09-12-2022 அன்று காலை சுகவீனம் காரணமாக அவரது வீட்டில் இயற்கை எய்தினார்.

இவர் சாவகச்சேரியைச் சேர்ந்த வனஜா ஆசீர்வாதத்தின் அன்பு கணவரும், செரி றோகான் (UAE - Dubai) இன் பாசமிகு தந்தையுமாவார்.

அன்னாரது புதவுடல் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு வத்தளை கெரவலபிட்டிய மயானத்தில் அடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை அவரது மைத்துனர்களான காலஞ்சென்ற அமரர் திரு. லோகசுந்தரம் (கனடா) திருமதி சந்திரவதனா லோகசுந்தரம்,(கனடா), காலஞ்சென்ற கார்த்திகேசு தம்பதியனர் (சாவகச்சேரி), திரு. நேசதாஸ் சிவசுந்தரம் (ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற திரு. திருமதி கதிரவேல் தம்பதியினர், திரு. திருமதி. சுந்தரலிங்கம் (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோருடன் இவர்களது பிள்ளைகளுமாக அன்னாருக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.

மேலும், இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

கதிரவேல் முகுந்தன். (பணியாளர்)
ShelvazugGmbh - Switzerland.