நிதி சேகரிக்க சென்ற நபர் ஒருவர் முதியவரின் 50 ஆயிரம் பெறுமதியான கைத்தொலைபேசியை களவாடியுள்ளார்!

Mayoorikka
3 years ago
நிதி சேகரிக்க சென்ற நபர் ஒருவர் முதியவரின் 50 ஆயிரம் பெறுமதியான கைத்தொலைபேசியை   களவாடியுள்ளார்!

ஊனமுற்றவர்களுக்கு நிதி சேகரிப்பதாக சென்ற நபர் ஒருவர்  அச்சுவேலி  பகுதியிலுள்ள முதியவரின் வீட்டினுள் சென்று 50 ஆயிரம் ரூபா பெறுமதியான கைத் தொலைபேசியை களவாடி சென்றுள்ளார். 

இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது 

அச்சுவேலி பத்தைமேனி பகுதியில் உள்ள வீடுகளுக்கு நபர் ஒருவர் சென்று நிதி சேகரித்துள்ளார்

 அதேபோல முதியவர் வசிக்கும் வீடொன்றுக்கும் குறித்த நபர் சென்ற போது அனுசரித்த முதியவர்100 ரூபா  நிதிப்பங்களிப்பை வழங்கிய போது இது காணாது சற்று அதிகமாக  தாருங்கள் என 500 ரூபாய் பணத்தினை வாங்கியிருந்தார்.

பின்னர்  குடிப்பதற்கு கொஞ்சம் தண்ணீர் தாருங்கள் என கேட்க முதியவர் வீட்டுக்குள்ளே சென்றபோது முதியவரின் 50 ஆயிரம்  ரூபா பெறுமதியான கைத்தொலைபேசியை அபகரித்து சென்றுள்ளார்,

குறித்த விடயம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4