சொகுசு கார் ஒன்று, முச்சக்கர வண்டியின் மீது மோதியதில் நபர் பலி

Kanimoli
3 years ago
 சொகுசு கார் ஒன்று, முச்சக்கர வண்டியின் மீது மோதியதில் நபர் பலி

கொழும்பு- கொள்ளுப்பிட்டியில் உள்ள இரவு விடுதியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று, முச்சக்கர வண்டியின் மீது மோதியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காலி முகத்திடல் நோக்கி இன்று காலை சென்ற கார், காலி வீதியில் அதே திசையில் சென்ற முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியது. இதில் படுகாயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் .

விபத்தில் கஹதுடுவ, பொல்கசோவிட்ட பிரதேசத்தில் வசிக்கும் 58 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

விபத்தின் போது காரில் மூன்று பெண்களும் ஆணொருவரும் இருந்ததாகவும், 29 மற்றும் 31 வயதுடைய இரு பெண்களும் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

காரின் சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், காரில் பயணித்த ஏனைய இருவரிடமும் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்த கொள்ளுப்பிட்டி பொலிஸார், சாரதிக்கு வலைவீசியுள்ளனர்.   

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4