நாட்டின் சீரற்ற காலநிலையால் வட-கிழக்கு பகுதிகளில் சுமார் 700 விலங்குகள் பலி

Kanimoli
3 years ago
நாட்டின் சீரற்ற காலநிலையால் வட-கிழக்கு பகுதிகளில் சுமார் 700 விலங்குகள் பலி

நாட்டின் சீரற்ற காலநிலையால் வட-கிழக்கு பகுதிகளில் சுமார் 700 விலங்குகள் உயிரிழந்துள்ளன.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இவ்வாறு கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

இவ்வாறு கால்நடைகள் உயிரிழந்தமைக்கு நாட்டில் ஏற்பட்ட காலநிலை மாற்றம் தான் காரணமா என்பதை அறிய பேராதனை பல்கலைக்கழக விஞ்ஞானி குழுவொன்று நேற்று வடக்கு மற்றும் கிழக்கிற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை கால்நடைகள் உயிரிழந்ததையடுத்து கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வைத்தியர் கொத்தலாவல கருத்து தெரிவிக்கையில்,“இந்த பகுதிகளில் முன்னெப்போதும் இல்லாத குளிர் காலநிலையே விலங்குகளின் உயிரிழப்பிற்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாங்கள் பேராதனை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழுவை கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுக்கு அனுப்பி விலங்குகளை பரிசோதிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இதேவேளை அவற்றின் இறப்புக்கான காரணத்தை கண்டறிய பிரேத பரிசோதனைகளை நடத்த உள்ளோம்.

பகுப்பாய்வு அறிக்கைகள் கிடைத்த பின்னர் விலங்குகள் உயிரிழந்தமைக்கான காரணத்தை கூற முடியும்.”என தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4