ஜனாதிபதிக்கு பொதுஜன பெரமுன கட்சி கடுமையான நிபந்தனை..

Prathees
3 years ago
ஜனாதிபதிக்கு பொதுஜன பெரமுன கட்சி கடுமையான நிபந்தனை..

அரசாங்கத்திற்கு ஆதரவாக எதிர்க்கட்சியில் இருந்து வருபவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு முன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட வேண்டுமென அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் குழுவொன்று குறிப்பிட்டுள்ளது.

தமது கட்சிக்கு 16 அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், அதனை முதலில் நிறைவேற்ற வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவிடம் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அவ்வாறு செய்யாமல் புதிதாக வருபவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கினால், அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதில் இருந்து விலகிக் கொள்வதாகவும் அந்தக் குழு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், வரவு செலவுத் திட்டம் முடிவடைந்துள்ளதால், உடனடியாக அமைச்சரவையை புதிதாக நியமிக்குமாறும், எதிர்க்கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு முதலமைச்சர் பதவிகளை வழங்கக் கூடாது எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தக் கோரிக்கைகளை பசில் ராஜபக்ச ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4