ஆழ்கடலில் ஆபத்தில் சிக்கிய மீனவர்களை மீட்பதற்காக கடற்படையினர் நடவடிக்கை

Prathees
3 years ago
ஆழ்கடலில் ஆபத்தில் சிக்கிய மீனவர்களை மீட்பதற்காக கடற்படையினர் நடவடிக்கை

சீரற்ற காலநிலை காரணமாகஇ ஆழ்கடலில் இடம்பெற்ற அனர்த்தத்தில் மீன்பிடி படகில் சிக்கிய மீனவர் ஒருவரை கடற்படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

திருகோணமலை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 26 ஆம் திகதி 5 மீனவர்களை ஏற்றிச் சென்ற பலநாள் மீன்பிடி படகு ஒன்று படகில் இருந்த மீனவர்களுடன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

தென்கிழக்கு கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படை கப்பல் ரணரிசி மூலம், விபத்துக்குள்ளான  கப்பலில் இருந்த 03 மீனவர்களை மீட்டுள்ளது.

விபத்தினால் காணாமல் போன இரண்டு மீனவர்களை தேடும் விசேட நீர்மூழ்கி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், கப்பலின் இயந்திர அறையில் சிக்கியிருந்த மீனவர் ஒருவரை பெரும் முயற்சியில் பத்திரமாக மீட்டு தற்போது மீனவர்கள் கரைக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். 

காணாமல் போன மற்றைய மீனவரைக் கண்டறிவதற்காக அந்தக் கடற்பரப்பில் தொடர்ந்தும் நடவடிக்கை எடுப்பதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4