இராணுவ தளபாடங்கள் மற்றும் நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Kanimoli
3 years ago
இராணுவ தளபாடங்கள் மற்றும் நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

கிளிநொச்சி - தருமபுரம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கண்டாவளை கோணங்குளம் பகுதியில் இராணுவ தளபாடங்கள் மற்றும் நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

புலனாய்வு துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து கிளிநொச்சி, முல்லைத்தீவு படை முகாம்களின் கட்டளைத் தளபதியின் வழிநடத்தலில் சந்தேகத்துக்கு இடமான வீட்டை இன்று (11) சோதனையிட்டபோது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை இராணுவ தளபாடங்கள் மற்றும் நாட்டுத் துப்பாக்கிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

இச்சோதனையின் போது இடியன் துவக்கு - 3, கட்டு துவக்கு - 11, இடியன் துவக்கின் மரப்புடிகள் (பட்) - 5, ரீ 56 ரவைகள் - 250, ஈய குண்டு - 8, பட்டாசுகள் - 16, வால்கள் - 2, கசிப்பு உற்பத்திப் பொருட்கள், பண்டி இறைச்சி - 8 கிலோ மற்றும் உடும்பு தோல் - 1 என்பவற்றுடன் 31 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தருமபுரம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4