கிழக்கு உக்ரைனின் பக்முத் நகரை ரஷ்யா அழித்ததாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

#Ukraine #Russia
Prasu
3 years ago
கிழக்கு உக்ரைனின் பக்முத் நகரை ரஷ்யா அழித்ததாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா 10 மாதங்களாக போர் தொடுத்து வருகிறது. தற்போது இந்த போர் சட்டவிரோதமாக ரஷியாவுடன் இணைத்துக்கொள்ளப்பட்ட 4 மாகாணங்களில் மையம் கொண்டுள்ளது. 

அந்த மாகாணங்களின் கட்டுப்பாட்டை நிறுவ ரஷியா போராடி வரும் சூழலில், அந்த மாகாணங்களை மீட்க உக்ரைன் ராணுவம் விடாமுயற்சியுடன் சண்டையிட்டு வருகிறது. 

இதனால் அந்த 4 மாகாணங்களிலும் உள்ள பல்வேறு நகரங்களில் தினமும் குண்டு மழை பொழிந்து வருகிறது. 

இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோ வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் மாகாணங்களில் உள்ள பல முன்னணி நகரங்களில் நிலைமை மிகவும் கடினமாக உள்ளது. 

குறிப்பாக டொனெட்ஸ்க் மாகாணத்தில் உள்ள கிழக்கு நகரமான பக்முத்தை ரஷிய ஆக்கிரமிப்பாளர்கள் அழித்துவிட்டனர். அந்த நகரின் நிலத்தில் வாழ்வதற்கு இடமில்லை என தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4