இந்தியாவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் புதின் பங்கேற்க அதிக வாய்ப்பு உள்ளதாக ரஷ்யா தகவல்

Prasu
3 years ago
இந்தியாவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் புதின் பங்கேற்க அதிக வாய்ப்பு உள்ளதாக ரஷ்யா தகவல்

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் காரணமாக அந்நாட்டுடனான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. 

இதன் எதிரொலியாக இந்தோனேசியாவில் அண்டையில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் ரஷிய அதிபர் புதின் பங்கேற்கவில்லை. 

இந்நிலையில் இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் புதின் பங்கேற்க அதிக வாய்ப்பு உள்ளதாக ரஷிய அதிபர் மாளிகையின் துணை தலைமை அதிகாரி ஸ்வெட்லானா லுகாஷ் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக ரஷிய அரசு செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: (ரஷிய அதிபர்) நிச்சயமாக ஜி20 உச்சி மாநாட்டிற்கு செல்வார் என்று நான் நம்புகிறேன். 

ஆனால் இது குறித்து எந்தவொரு சந்தர்ப்பத்திலும், அவர்தான் முடிவு செய்ய வேண்டும். அடுத்த உச்சி மாநாடு நடைபெற ஒரு வருடம் இருக்கும் போது, இது குறித்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாது. 

நான் பார்க்கும் விதம் என்னவென்றால் இதற்கான வாய்ப்புகள் அனைத்தும் உள்ளன. நாங்கள் எந்த ஒரு நிகழ்வையும் தவறவிட மாட்டோம் என்று நான் நம்புகிறேன். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4